சிங்காநல்லூர் அரண்மனை,பொள்ளாச்சி.
# Singanallur Palace, Pollachi. 😍
இயற்கையை ரசிக்க எல்லோருமே
ஆசைப்படுவோம். அதை சினிமாவில்
பார்க்கும்போது அந்த இடங்களுக்கு
போகவேண்டும்போல் இருக்கும்.
அப்படியான ஒரு
பகுதிதான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி
அருகே உள்ள சிங்காநல்லூர்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்
படங்கள் இந்த இயற்கை தவழும் நிலத்தில்
எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல இங்கு
படமாக்கப்படும் சினிமாக்களில் நாயகன் அல்லது
வில்லன்களின் வீடு என்று ஒரு வீடு
காண்பிக்கப்படும். பிரம்மாண்டமான
தூண்களுடன் செட்டிநாடு வீடுகளின் கம்பீரத்துடன்
இருக்கும் இந்த வீட்டின் பெயர் 'சிங்காநல்லூர்
அரண்மனை'. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள
சிங்காநல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது..
இந்த வீட்டுக்கு மிகப் பெரிய அடையாளம் இங்கு
படமாக்கப்பட்ட 'தேவர் மகன்' படம். கமலஹாசனின் வீடாக வரும் இந்த வீட்டில்தான்
இந்தப் படத்தின் அதிக காட்சிகள்
படமாக்கப்பட்டன.
அதுபோல் சின்ன கவுண்டர், முறை மாமன், மாமன்
மகள், நாட்டாமை, சில்லுனு ஒரு காதல், கொடி,
ஆம்பள, உள்ளிட்ட பல படங்களும் பாக்யராஜ்,
சுந்தர்ராஜன், சுந்தர் சி, கே எஸ் ரவிக்குமார்
படங்களில் பெரும்பாலும் இங்கே
படமாக்கப்பட்டுள்ளன.
கிராமத்து படம் என்றாலே தவறாமல் இந்த
அரண்மனை படத்தில் இடம்பெறும்.
இந்த ஜமீன் முத்தூர் அரண்மனை , 1934-ம்
ஆண்டில் பழனிசாமி கவுண்டர் என்பவரால்
கட்டப்பட்டது.
#pollachi #Aliyar #coimbatorediaries #coimbatorelife
#LatestNewsPollachi
Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.
Facebook: https://www.facebook.com/nammapollachiofficial
Twitter: https://twitter.com/NammaPollachi
Instagram: https://instagram.com/nammapollachiofficial
Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg
Website: https://nammapollachi.in