Namma Pollachi

Latest News

Blog
#சிக்குமா_சிறுத்தை கோவை குனியமுத்தூர் அருகே பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணி ஐந்தாம் நாளாகத் தொடர்கிறது.
4 months ago

Eye1

News
#சிக்குமா_சிறுத்தை கோவை குனியமுத்தூர் அருகே பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணி ஐந்தாம் நாளாகத் தொடர்கிறது. கோவை குனியமுத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சுற்றிதிரிவதாக தொடர்ந்து செய்திகள் உலா வந்தது. அப்பகுதியில் இருக்கும் நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சிறுத்தை பதுங்கி உள்ளதாக வனத்துறைக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் அந்த குடோனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டனர். இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக அங்கு இரண்டு கூண்டுகளை வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயன்று வருகின்றனர். குடோனைச் சுற்றி வலை அமைத்தும், நாயை கட்டி வைத்தும், உணவிற்காக மாமிசங்களை வைத்தும், பட்டாசு வெடித்தும் பார்த்தனர். ஆனால், சிறுத்தை கடந்த நான்கு நாட்களாக எதற்கும் அசரவில்லை. இன்றாவது சிறுத்தை சிக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அப்பகுதி மக்களுடன் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர். #Coimbatore #Tiger

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in